நடிகர் ரஜினிகாந்த் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர், தனது சினிமா பணியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற அவர், இரண்டு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று (11.07.2021) அவர் தரப்பிலிருந்து, ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை திங்கள்கிழமை சந்திக்க உள்ளார் எனும் தகவல்கள் வெளியாகின. இதனால், மீண்டும் அவர்களது ரசிகள் மத்தியிலும் மன்ற நிர்வாகிகள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், இன்று காலை மன்ற நிர்வாகிகளை சந்திக்க ரஜினி கிளம்பினார். அதற்கு முன்னதாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, தான் அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்று ரசிகள் மத்தியிலும், மன்ற நிர்வாகிகள் மத்தியிலும் கேள்வி உள்ளது. அதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முடிவுசெய்து தெரிவித்துள்ளார். அவரது வருகைக்காக அவரது ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தின் வெளியே கூடியிருந்தனர். அவர் வருகையின்போது, அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.