Skip to main content

‘கோமாளி’பட ட்ரெய்லரில் ரஜினி அரசியல் குறித்து சர்ச்சை- தயாரிப்பாளரிடம் வருத்தம் தெரிவித்த கமல்!

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

அடங்க மறு படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தனது அடுத்த படமாக கோமாளி என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 24- வது திரைப்படமாகும். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.  

 

Actor Kamal expresses regret over Rajini's politics in film COMALI TRAILER

 

 

இந்த படத்தில் 16 ஆண்டுகளாக நடிகர் ஜெயம் ரவி கோமாவில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் உள்ள ஜெயம் ரவி திடீரென கண் விழிக்கிறார். பின்பு தன் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது ஜெயம் ரவியிடம் யோகி பாபு நீ ஜஸ்ட் 16 வருசமா கோமாவில் தான் இருந்த என்று கூற, மேலும் அதிர்ச்சி அடைகிறார் ஜெயம் ரவி. யோகியின் பேச்சை ஜெயம் ரவி நம்பவில்லை. தன் பேச்சை நம்பாத ஜெயம் ரவியை நம்ப வைக்க யோகி பாபு “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார். அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் 'ஏய்', இது 96. யாரை ஏமாத்துறீங்க  என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.

 

 

Actor Kamal expresses regret over Rajini's politics in film COMALI TRAILER


இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். இதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்