பேருந்து படிக்கட்டில் நின்று மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகப் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் கீழே விழுந்து அடிபட்டனர். 2 பேர் சம்பவ இடத்திலேயே பேருந்தின் டயர் ஏறி பலியானார்கள். இதனால் பேருந்து படிக்கட்டில் பயணிப்பவர்களைத் தடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு முறையான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் பெரிய அளவில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் உள்ளிட்ட யாரும் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி பயணிக்க அனுமதியளித்தால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.