80 வயது முதியவர் படுகொலை
அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது கலியபெருமாள். வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்த அவர் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலை நீண்ட நேரம் வெளியே வராததால் அக்கம் பக்கம் மக்கள் சந்தேமடைந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது கலியபெருமாள் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். பெரியவருக்கு இரண்டு மனைவிகள், 12 பிள்ளைகள். இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். ஆண்டிமடம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
எஸ்.பி.சேகர்