Skip to main content

78 கேள்விகள்... மீண்டும் ஆஜரான ஓபிஎஸ்

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

78 questions ... OPS reappearing

 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 07/03/2022 அன்று மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர்.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மார்ச் 21ஆம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ் நேற்று முதல் முறையாக ஆஜராகினார். அவரிடம் நேற்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் மொத்தம் 78 கேள்விகள் ஜெயலலிதா தொடர்பாக கேட்கப்பட்டது. பல கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது, அதுபற்றி என்னிடம் யாரும் கூறவில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது.

 

குறிப்பாக  2016ஆம் ஆண்டு செப்.22ஆம் தேதி ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தெரியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவரை நான் பார்க்கவில்லை. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் நிகழ்வில்தான் அவரைப் பார்த்தேன். அதற்கு பிறகு பார்க்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

 

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் விசாரணைக்காக ஓபிஎஸ் மீண்டும் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். இன்று ஆஜராகும் ஓபிஎஸ்-சிடம் ஆணையம் சார்பில் விசாரணை நடந்து முடிந்தவுடன், சசிகலா தரப்பு வழக்கறிஞர் அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்