Published on 12/09/2020 | Edited on 12/09/2020
தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 58 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 71 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது" எனக் குறிப்பிட்டுள்ளது.