Skip to main content

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்களின் ஆர்ப்பாட்டம்

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 
நில அளவை அலுவலர்களின்  ஆர்ப்பாட்டம் 

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்களின் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக துணை ஆய்வாளர் தேர்வில் உள்ள குறைகளை களையவும், திட்டப்பணிக்கு என தனியாக பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தினர். மாவட்ட அளவில் பணி யாளர்களின் பணி மாறுதல் தொடர்பாக இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவு, ஊழியர்களிடம் பணி மாறுதல் குழப்பத்தினையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் உயர்பதவிகள் நிரப்பப்படாததால் காலியாக இருப்பதால் நிர்வாகமும், ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அனைத்து நில அளவை களப்பணியாளர்களின் நாட்குறிப்புகளை எளிமைப்படுத்திடவும், நிலஅளவையர் அனைவருக்கும் பவானிசாகர் நிர்வாகன் பயிற்சியினை வழங்கி களப்பணியாளர்களுக்கு நிரணயிக்கப்பட்ட பயணப்படி ஊதியத்துடன் பட்டியலிட்டு வழங்கிட வலியுத்தியும் ,  நில அளவை அலுவலர்கள் கோவை மண்டலத்தின்  சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி , கோஷங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- அருள்

சார்ந்த செய்திகள்