இம்மானுவேல் சேகரன் 60வது நினைவு நாள்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று நடைபெற உள்ள இம்மானுவேல் சேகரன் 60வது நினைவு நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்த ஏடிஜிபி திரிபாதி, போலீசாருக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.