Skip to main content

இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

இந்தியர்களின் 60 லட்சத்துக்கு மேற்பட்டவர்களின் டிக் டாக் வீடியோக்களை நீக்கியதாக டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

tik tak

 

விதிகளைமீறி பதிவிடப்பட்ட வீடியோக்கள் செயலியில் இருந்து நீக்கியுள்ளதாக டிக் டாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆபாசமாக  பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களை நீக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

அண்மையில் டிக் டாக் செயலியை தடைசெய்யகோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தொடுத்த வழக்கின் விசாரணையில் டிக்டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்திருந்தது குறிப்படத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்