Published on 13/01/2021 | Edited on 13/01/2021
நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனா, ராமா நதி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மணிமுத்தாறு ஆணையிலிருந்து 25 ஆயிரம் கன அடி நீரும், பாபநாசம் அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி நீரும், சேர்வலாறு அணையிலிருந்து 4,700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.