Skip to main content

தமிழகத்தில் 5 ஆயிரத்து 400 பேர் டெங்குவால் பாதிப்பு

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
தமிழகத்தில் 5 ஆயிரத்து 400 பேர் டெங்குவால் பாதிப்பு 

தமிழக சுகாதாரதுறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தர்மபுரி அரசு மருத்துவக்க ல்லூரியில் மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் பிரிவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து சிகிச்சை குறித்து விசாரித்தார்.

இதனையடுத்து தினமும் காய்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள் அவர்களுக்கு உரிய மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது., தர்மபுரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் 200 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 5 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் நிலவேம்பு கஷாயத்தை அருந்த வேண்டும், சித்த மருத்துவத்திற்காக மத்திய அரசு ஆயூஸ் திட்டத்தின் மூலம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்தும் வகையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களபணியாளர்கள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினரும், பூச்சியியல் வல்லுனர்கள் 130 பேரும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக குடற்புழு தினத்தையொட்டி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு  குடற்புழு மாத்திரைகளை வழங்கி டெங்கு விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார்.

- வடிவேல்

சார்ந்த செய்திகள்