சரக்கு பெட்டக மாற்று முனையத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 5 எம்.எல்.ஏ க்கள் கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டம் இணையத்தில் மத்திய அரசு சார்பில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூா்வக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மீனவா்களின் தொடா் போராட்டத்தால் அந்த திட்டம் கன்னியாகுமரி அருகே கோவளத்திற்கு மாற்றப்பட்டது. இதை கண்டித்து அந்த பகுதி மீனவா்கள் தொடா் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தின் முன் லட்சம் கணக்கான மீனவா்கள் திரண்டு சரக்கு பெட்டக மாற்று முனையத்துக்கு எதிராக கவன ஈா்ப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இதற்கான அனுமதியும் போலீசிடம் வாங்கியிருந்தனா்.
இந்த நிலையில் மீனவா்களின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தரிவித்து சரக்கு பெட்டக மாற்று முனையத்துக்கு ஆதரவு இயக்கமாக பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் அதே நாளில் முமு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா்.
இரண்டு தரப்பினரின் ஒரே நாளில் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட கூடும் என கருதி மீனவா்களின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனா். இதனால் பா.ஜ.க வும் போராட்டத்தையும் கைவிட்டது. இந்த நிலையில் இன்று கலெக்டா் அலுவலகத்தின் முன் தி.மு.க காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் தலைமையில் மீனவா்கள் கலந்து கொள்ளும் போராட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் போலிசிடம் இருந்து அனுமதி வாங்கியிருந்தனா். இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க வும் இன்று மீண்டும் முமு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா். இதனால் மீண்டும் போலீசார் மீனவா்கள் போராட்டத்துக்கு கொடுத்த அனுமதியை மறுத்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ க்களும் மீனவா்கள் திட்டமிட்டபடியே போராட்டம் நடக்கும் என அறிவித்தனா். உடனே போலீசார் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவா்கள் என எச்சரித்தனா். இதனையடுத்து மாவட்டம் முமுவதும் போலீசார் குவிக்கபட்டனா். இதனால் இரவி்ல் இருந்தே மாவட்டம் முமுவதும் பரபரப்பில் தொற்றி கொண்டது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராமங்களில் இருந்து மீனவா்கள் கடலுக்கு போகாமல் நாகா்கோவிலை நோக்கி படையடுத்தனா். உடனே போலீசார் அந்தந்த பகுதியில் மீனவா்களை தடுத்து நிறுத்தியதால் கன்னியாகுமரி, மணக்குடி, பள்ளம், கோவளம், ஆரோக்கிய புரம் வேப்ப மூடு பகுதியில் ஆயிரக்ணக்கான மீனவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தினார்கள்.
இதற்கிடையில் போலீசாரின் தடையை மீறி கலெக்டா் அலுவலகம் முன் குவிந்த மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தி.மு.க எம்.எல்.ஏ க்கள் சுரேஷ் ராஜன், மனோதங்கராஜ், ஆஸடின் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் ராஜேஷ்குமார் பிரான்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனா். இந்தநிலையில் மீனவா்களுக்கும் போலீசாருக்குமிடையே திடீரென்று தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடா்ந்து இரண்டு மணி நேரம் நடந்த போராட்டத்துக்கு பின் 5 எம்.எல்.ஏ க்கள் உட்பட மீனவா்களை போலீசார் கைது செய்தனா். இதனால் மாவட்டம் முமுவதும் பரபரப்பு ஏற்பட்டது.