எம்.ஜி.எம் குழும நிறுவனங்கள் 400 கோடிக்கும் மேலாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
எம்.ஜி.எம் குழும நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் எழுந்த நிலையில், தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக நடந்த இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 3 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பிடிபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. வியாபார கணக்குகளை மறைத்து 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது வருமான வரித்துறையின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.