திருவண்ணாமலை நகரில் திருவூடல் தெருவில் பில்லூரார் மடம் உள்ளது. இந்த மண்டபத்துக்கு அருகில் பல் மருத்துவர் சீனுவாசன் தனது இடத்தில் வீடு மற்றும் மருத்துவமனை கட்டுகிறார். இதற்கான பணிகளை கொத்தனார்கள் செய்து வருகின்றனர்.
2 ந்தேதி மதியம் பில்லர் போடுவதற்காக பள்ளம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பணியாளர்கள் வேலை செய்துக்கொண்டு இருந்த நிலையில் அருகில் இருந்த மடத்தின் ஒருப்பக்க சுவர் வேலை செய்துக்கொண்டு இருந்த கூலி ஆட்கள் மீது விழுந்துள்ளது. அதில் 4 பேர் அடியில் சிக்கியுள்ளனர். இதைப்பார்த்து மற்ற வேலையாட்கள் அதிர்ச்சியாகி, அழுதுக்கொண்டே கத்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்துவிட்டு மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதோடு, தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்ல அவர்களும் சம்பவயிடத்துக்கு வந்து ஜே.சி.பி வைத்து இடிபாடுகளை அகற்றி அடியில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 4 பேரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் அலமேலு, கார்த்தி உட்பட மூவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த இடத்தை எஸ்.பி பொன்னி ம்ற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விசாரித்துவிட்டு சென்றனர். கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதிவுச்செய்யக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு மழை நீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியபோது ரமணாஸ்ரமம் சுற்றுசுவர் விழுந்து தொழிலாளிகள் இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை வேலைவாங்குவதால் தொழிலாளர் இறப்பு என்பது இந்த மாவட்டத்தில் சகஜமாகவுள்ளது. அரசு கண்டுக்கொள்ளுமா என்பதே பலரின் கேள்வி ?