3 லட்சம் குட்கா பறிமுதல்
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், ‘டி’ பிளாக்கில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் 300 பாக்கெட்களில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக சின்மயா நகர் குளசேகரபுரத்தை சேர்ந்த சக்திவேல் (42), நெல்லை மாவட்டம் சாத்தாங்குளத்தை சேர்ந்த சுந்தர் (30) ஆகிய 2 இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.