Skip to main content

3 மணிநேர பேச்சுவார்த்தை ; அதிமுக தேமுதிக கூட்டணியில் இழுபறி!!

Published on 06/03/2019 | Edited on 06/03/2019
 3 hour negotiations; The AIADMK coalition tug!

 

மூன்று மணி நேரமாக நடந்த அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்தை முடிவு எட்டப்படாமல் இழுபறியில் முடிவுற்றது.  

 

இன்று சென்னை விமானநிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்- அமைச்சர் வேலுமணியுடன் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்  திடீர் ஆலோசனை நடத்தினர். ஆனால் அந்த ஆலோசனையின் போது தேமுதிக நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி பேச வைத்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தேமுதிக கூட்டணி அறிவிக்கப்படாத நிலையில் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் கொடிகள் மோடி பொதுக்கூட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. 

 

திமுகவும் தேமுதிக கேட்கும் அளவிலான தொகுதிகளை இப்போது ஒதுக்கமுடியாது. நேற்றே கூட்டணி இறுதிவடிவம் பெற்றது என கைவிரித்த நிலையில்,

 

மீனம்பாக்கம் தனியார் நட்சத்திர  ஓட்டலில் இரவு 7.30 மணியளவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை மீண்டும் சந்தித்தார்  தேமுதிக துணைப்பொதுச்செயலார் சுதீஷ்.

 

அதனையடுத்து அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்தையில்தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணி குறித்து மூன்று மணி நேரமாக நடைபெற்ற  பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவு பெற்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்