Skip to main content

3 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி!

Published on 14/12/2017 | Edited on 14/12/2017
3 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி!

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி மதுரை வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ய இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.



அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்க வேல் உத்தரவின் பேரில் திருவாடானை துணைக்கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருவாடானை தொண்டி ரோட்டில் அச்சங்குடி அருகே நின்ற நானோ காரை சோதிக்க சென்ற போது இருவர் தப்பி ஒடியுள்ளனர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்த போது வாகனத்தில் 1 3/4 அடி ஐம்பொன் விநாயகர் சிலை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிலைகளை கைப்பற்றிய நாகப்பட்டினம் காவல்துறையினர் கடத்தல்காரர்களான தங்கபாண்டியன், வெள்ளையபுரத்தை சேர்ந்த செய்யது அப்தாகிர், ரிஸ்வான், அம்ஜத்கான் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடத்தப்பட இருந்த இந்த சிலையின் மதிப்பு 3 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை எங்கு இருந்து எடுக்கப்பட்டது. எந்த காலத்து சிலை என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்