அமைந்தகரையில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
சென்னை அமைந்தகரையில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜீத்குமார், சாமுவேல், இளங்கோவன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்த மூவரையும் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.