Skip to main content

29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு

Published on 22/01/2018 | Edited on 23/01/2018

29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : 
விஜயகாந்த் அறிவிப்பு

அரசு பேருந்து கட்டணத்தை திடீர் என்று உயர்த்திய தமிழக அரசை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு:                                                                                                                                              



 ’’தமிழக ஏழை, எளிய மக்கள் தினந்தோறும் குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்தை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. ஆனால் ஆளுகின்ற அதிமுக அரசு திடீரென்று வரலாறு காணாத அளவிற்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. இந்த கட்டண உயர்வு என்பது, பேருந்தில் பயணிப்பதை  கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்த கட்டண உயர்வுக்கு மாநில அரசை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 29.01.2018 அன்று காஞ்சி வடக்கு மாவட்டம், பல்லாவர நகரத்தில் மாலை 3.00 மணியளவில் கழக நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர்  விஜயகாந்த் தலைமையேற்று கண்டன உரையாற்றுகிறார். அன்றே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.’

சார்ந்த செய்திகள்