கோவையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் குளறுபடிகள் செய்வதாக குற்றம் சாட்டி 30க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகிதம் சேர்க்கை ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சேர்க்கையில் 25% இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை குழுக்களிலும் முறைகேடு செய்வதாக குற்றம் சாட்டி முப்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது தனியார் பள்ளிகள் 25 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் வழங்க வேண்டும் என அறிவுறுத்துவதாகவும், பள்ளியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் வீடு இருந்தால் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் பள்ளி நிர்வாகம் திடீரென கூறுவதால் தாங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தமிழக அரசு இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க மாணவர்கள் அலைக்கழிப்பு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்
.