தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021 வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார். அதனை திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி பெற்றுக்கொண்டார். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடமும் பட்டியல் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அந்தத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை.
செங்கம் (தனி): ஆண்கள்: 1,32,927, பெண்கள் - 1,34,458, மூன்றாம் பாலினத்தவர் - 6, மொத்தம் - 2,67,391
திருவண்ணாமலை: ஆண்கள்: 1,35,363, பெண்கள் - 1,43,774, மூன்றாம் பாலினத்தவர் - 37, மொத்தம் - 2,79,174
கீழ்பெண்ணாத்தூர்: ஆண்கள்: 1,22,197, பெண்கள் - 1,26,004, மூன்றாம் பாலினத்தவர் - 9 , மொத்தம் - 2,48,210
கலசப்பாக்கம்: ஆண்கள்: 1,16,982, பெண்கள் - 1,19,992, மூன்றாம் பாலினத்தவர் - 12, மொத்தம் - 2,36,986
போளூர்: ஆண்கள்: 1,17,842 , பெண்கள் - 1,21,563, மூன்றாம் பாலினத்தவர் - 5 , மொத்தம் - 2,39,410
ஆரணி: ஆண்கள்: 1,30,937, பெண்கள் - 1,38,351, மூன்றாம் பாலினத்தவர்- 12, மொத்தம் - 2,69,300
செய்யாறு: ஆண்கள்: 1,24,804, பெண்கள் - 1,29,724, மூன்றாம் பாலினத்தவர் - 7, மொத்தம் - 2,54,535
வந்தவாசி (தனி): ஆண்கள் 1,16,309, பெண்கள் - 1,18,730, மூன்றாம் பாலினத்தவர் - 5 , மொத்தம் - 2,35,044
இதன்படி 8 தொகுதிகளிலும் சேர்த்து 20 லட்சத்து 30 ஆயிரத்து 50 வாக்காளர்கள் உள்ளனர்.
நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
வரும் நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13 ஆம் தேதிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாகவும் பெயர் சேர்த்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.