Skip to main content

தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா முதல் தமிழகம் வரை வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்