விழுப்புரம் ஜங்சன் பகுதியில் ரயில்வேயில் பணி புரியும் ஊழியர்களுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு, அவை காலப்போக்கில் பல குடியிருப்புகளில் யாரும் இல்லாத நிலையில் அந்த குடியிருப்பு வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன. இந்த வீடுகளில் இரவு நேரங்களில் பாலியல்தொழில், கஞ்சா, மது போதை என சமூகவிரோதிகளின் இருப்பிடங்களாக மாறியுள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் கடந்த 14ஆம் தேதி 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரை யார் கொலை செய்தார்கள் என்று காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். பின்னர் விசாரணையின் அடிப்படையில் மருது ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் சேர்த்தனர். அந்த சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், "விழுப்புரம் ரயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள கடையில் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறேன். இதனால் அதிக நேரம் ஜங்சன் பகுதியில் சுற்றிக் கொண்டிருப்பேன்.
அப்பகுதியில் பெண் ஒருவர் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். இரவு நேரங்களில் அவரை சிலர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவார்கள். சம்பவத்தன்று என்னுடன் பாழடைந்த ரயில்வே குடியிருப்புக்கு அந்த பெண் வந்தார். அங்கு என்னிடம் 500 ரூபாய் பணம் கேட்டார். என்னிடம் ஐம்பது ரூபாய் மட்டுமே இருக்கிறது. அதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினேன்.
அந்த பணத்தை வாங்க மறுத்ததோடு நீ சிறுவன் நீ இப்படி நடந்து கொள்வதை பற்றி உனது பெற்றோரிடமும் போலீசிடமும் கூறுவேன் என்று மிரட்டினார். இதனால் மிரண்டு போன நான் அவரை கொன்றேன்" என்று கூறியுள்ளான்.