Published on 11/09/2020 | Edited on 11/09/2020
தமிழகத்திக்கு ஆறாவது தவணையாக ரூபாய் 335.41 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய நிதியமைச்சகம்.
15- வது நிதிக்குழு பரிந்துரைப்படி ஆந்திர பிரதேசம், அசாம், சிக்கிம், கேரளா, இமாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், திரிபுரா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய 14 மாநிலங்களுக்கு ரூபாய் 6,195 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
வரி வசூலில் மாநில பங்காக அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு ரூபாய் 1,276.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய நிதியமைச்சகம்.
இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.