தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதிபாண்டியன் 2011 ஜன.10 அன்று திண்டுக்கல்லில் அவரது வீட்டிலிருந்த போது வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடியின் அலங்காரத்தட்டு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
வருடம் தோறும் ஜன.10 அன்று அவரது ஆதரவாளர்கள் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் அலங்காரத்தட்டில் அனுஷ்டிக்கப்படுவதுண்டு. அதனை முன்னிட்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமலிருக்கவும் நிகழ்ச்சி அமைதியாகவும் நடக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டக் கலெக்டரான சந்தீப் நந்தூரி மாவட்டம் முழுவதும் 09.01.2019 மாலை முதல் 11.01.2019 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அந்த ஆணையில் தடை காலத்தில் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் கூடுவதற்கும் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோதி ஊர்வலம் மற்றும் ஆயுதங்களுடன் வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 05ம் தேதி பசுபதிபாண்டியனின் ஆதரவாளர்களான தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில செ.வான கண்ணபிரான், குமுளி ராஜ்குமார், எஸ்டேட் மணி உள்ளிட்ட தலைவர்கள் உட்பட அவர்களின் ஆதரவாளர்கள் 14 பேர்கள் நெல்லை அருகில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பு சூட்டைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் தி.மு.க.வின் மகளிரணி மாநில செ.வும், ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி தலையில் தேர்தல் பொருட்டு 8, 9, ஆகிய தேதிகளில் விளத்திகுளம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளின் ஊராட்சி சபை கூட்டம் நடப்பபதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டம் தடை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.