Skip to main content

'அரிக்கொம்பனை பிடித்த பின்னரே 144 தடை விலக்கப்படும்' - மக்களுக்கு தேனி ஆட்சியர் எச்சரிக்கை

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

'144 ban will be lifted only after capture of Arikkompan'- Theni collector warns people

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சின்னகானல் பகுதியில் 10 பேருக்கும் மேற்பட்டோரை தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் எனும் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. முதற்கட்டமாக மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஏற்கனவே இந்த அரிக்கொம்பன் யானை கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஆறு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தேக்கடி புலிகள் காப்பகத்தில் விடப்பட்டிருந்தது. அங்கிருந்து மேகமலை சென்ற யானை மீண்டும் குமுளியில் இறங்கி தற்போது கம்பம் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளது.

 

சாலையில் அச்சுறுத்தும் விதமாக நடந்து வந்த யானை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை துரத்தும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்காக பொள்ளாச்சியிலிருந்து இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.

 

இந்நிலையில் அரிக்கொம்பன் யானை அருகில் செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அரிக்கொம்பன் செல்லும் பகுதியில் பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம். யானை அருகில் செல்வதையோ புகைப்படம், வீடியோ எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். அரிக்கொம்பன் யானையை  பார்க்க சென்றபோது தாக்கியதில் பால்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட்ட பின்பு 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும். அதுவரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க ஏதுவாக அதனை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்