Skip to main content

‘130 கோடி மக்களுக்கும் பணம் வழங்கினால் மகிழ்ச்சிதானே!’ -ரூ.10 ஆயிரம் நிவாரணம் கோரிய வழக்கில் உயர்நீதி மன்றம்! 

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

high court chennai

 

தேசிய மக்கள் சக்தி கட்சி, ‘ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அதனால், தாய் தந்தையான அரசு, ஏழை எளிய குடும்பத்தினர் அனைவருக்கும் ரூ.10000/- வழங்க வேண்டும்.’ என்று வழக்கு தொடர்ந்திருந்தது. 

 

இந்த வழக்கு,  நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேஸ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு முன் மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், மனுதாரர் 130 கோடி மக்களுக்கும் பணம் நிவாரணம் கேட்கிறார் என்றதற்கு,  நீதியரசர் ‘கொடுத்தால் மகிழ்ச்சி தானே’ என்று பதில் உரைத்தார். மாநில அரசு இரண்டு முறை 1000/- ரூபாய் கொடுத்துள்ளோம், நலவாரியம் வாயிலாகவும் கொடுத்துள்ளோம் என்ற வாதத்திற்கு,  இதை அபிடவிட்டாக சமர்ப்பிக்க உத்தரவிட்டு,  வழக்கை இரண்டு வாரம் தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்