Skip to main content

சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்; 11 காவலர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!

Published on 06/11/2024 | Edited on 06/11/2024
11 more jail guards sacked over beaten of lifer in jail

வேலூர் தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசி சிவக்குமாரை அப்போதைய வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைக்குச் சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவும் அப்போது சிறைத்துறை டிஐஜி வீட்டில் அவர் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி சிறையில் வைத்து 90 நாட்கள் தாக்கப்பட்டு, கொடுமை படுத்தப்பட்டதாக சிவகுமாரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதனை அடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் சிறைத் துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக வேலூர் சிறைத் துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, எஸ்.பி.அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மத்தியச் சிறை காவலர்களான ராஜு, ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி,  பெண் சிறை காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறை வார்டன் சுரேஷ், சேது ஆகிய 14 பேரை பணியிட நீக்கம் செய்து சிறைத் துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்