Skip to main content

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு; உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற செம்மலை மனு

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு; உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற செம்மலை மனு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை உச்சநீதிமன்றத்துக்கும் மாற்ற செம்மலை மனு அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று பெரும்பான்மையை நீருபிக்க கடந்த பிப்ரவரி 18ம்தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர்.

இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்ததை அடுத்து, அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதனையடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதில், ஜக்கையனின் விளக்கத்தை மட்டும் ஏற்றுக் கொண்ட தனபால், மற்ற 18 பேரையும் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஓபிஎஸ் உட்பட 11 பேர் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததால் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற செம்மலை மனு அளித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்