11 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
முகப்பேர் கிழக்கு கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (40) இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் திலீப் (எ) டில்லிபாபு, ராஜ்குமார், ராஜீவ் (27) ஆகிய 3 பேரும் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வசூல் பணத்தை 11 லட்சத்து 96 ஆயிரம் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜீவ்வை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.