Skip to main content

10 மற்றும் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Published on 14/10/2024 | Edited on 14/10/2024
10th and 11th and 12th General Examination Time Table Release

தமிழகத்தில் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,''மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம். பொதுத்தேர்வு அட்டவணையை இன்று வெளியிடுகிறோம். அதன்படி  12 ஆம்வகுப்பிற்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.11ஆம் வகுப்பை பொறுத்தவரை பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.

பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல் 12 ஆம் வகுப்பு மெயின் தேர்வு மார்ச் மாதம் 3 ஆம் தேதி ஆரம்பித்து, மார்ச் மாதம் 25ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்புக்கான மெயின் தேர்வு மார்ச் மாதம்5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்புக்கான மெயின் தேர்வு மார்ச் மாதம் 28ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் தேதியைப் பொறுத்தவரை 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்புக்கான முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்படும்'' என அறிவித்தார்.

சார்ந்த செய்திகள்