கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை அருகே விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் அழகிரி, கடலூர் மாவட்ட தலைமை காவலர் முரளிராஜன் ஆகியோர் கடலூர் மதுவிலக்கு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவலர்களுடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதி வேகமாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தினர்.
வாகனத்தை நிறுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். அந்த வாகனத்தை சோதனை செய்ததில் ஆஸ்பெட்டாஷ் ஷீட்களை அடுக்கி வைத்து அதனுள் வெள்ளை கேன்களில் எரிசராயத்தை மறைத்து கடத்தப்பட்டது தெரிந்தது.
35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 வெள்ளை நிற கேன்களில் ஏழு லட்சம் மதிப்புள்ள 1050 லிட்டா் எரிசாராயம் இருந்ததை கண்டுபிடித்து, எரிசாராயத்தையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாகன ஓட்டுனர் தலைமறைவான நிலையில் வாகனத்தின் உரிமையாளார் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த மதன்ராஜ் என்பது தெரியவந்தது. அதேசமயம் இவ்வளவு எரிசாராயம் எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது தெரியவில்லை.