Published on 30/07/2022 | Edited on 30/07/2022
என்எல்சியில் 299 பட்டதாரி பொறியாளர்கள் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வட இந்தியர் என்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'என்எல்சியில் 100 சதவிகித பணி வாய்ப்பும் வட இந்தியர்களுக்கே தரப்பட்டுள்ளது வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. என்எல்சிக்காக அப்பகுதியின் முப்பது கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரமான நிலங்களைத் தந்துள்ளனர். தமிழர்கள் தந்த நிலத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. என்எல்சியின் 100 சதவிகித பணி வாய்ப்பும் தமிழர்களுக்கே வழங்கும் வகையில் பணி நியமன தேர்வு முறையை மாற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.