Skip to main content

100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த கோரி பேரணி

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த கோரி பேரணி



மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தேவையான சட்ட திருத்தம் செய்து 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்திட வேண்டும். கிராமப்புற வேலை திட்டத்தில் வறட்சி காலத்தில் வழங்க வேண்டிய சட்ட படியான 150 நாள் வேலையை வழங்கிட வேண்டும். வறட்சி நீடிக்கும் நிலையில் விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்கிட வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டகூலி ரூபாய் 205ஐ வழங்கிட வேண்டும். ஊரக வேலை திட்ட நாட்கள் 200 ஆகவும், தினக்கூலி ரூபாய் 400 ஆகவும் உயர்த்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் சேப்பாக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைப்பெற்றது. இதில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

படம்: ஸ்டாலின்

சார்ந்த செய்திகள்