Skip to main content

எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது -எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
eps


   
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி 7 அடி உயரத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போன்று எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
 

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
 

இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக கட்சியை வழி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதா தான். எத்தனை தடைகள் வந்தாலும் அதனை துணிச்சலோடு எதிர்கொண்டு அரசியலில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா. இயக்கத்தை கட்டிக்காத்து நம்மிடையே விட்டுச்சென்றுள்ளார். 
 

சாதாரண அடிமட்டத் தொண்டன்கூட இந்த இயக்கத்தில் உயர் பொறுப்புக்கு வர முடியும். அவர் மறைந்தாலும் நம் இதயங்களில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 
 

இந்த கட்சியையும், அ.தி.மு.க. ஆட்சியையும் யாராலும் உடைக்க முடியாது. சிலர் சதி செய்தபோதும் கட்சியையும் ஆட்சியையும் உடைக்க முடியவில்லை. ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது எனக் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்