Published on 25/06/2019 | Edited on 25/06/2019
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அதிமுக தலைமை எடுத்து வருகின்றனது. இந்த நிலையில் அமமுக கட்சியிலிருந்து அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் விலக போவதாக செய்திகள் வருகின்றன. அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் வெகு விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க எடப்பாடி தரப்பு அதிக முயற்சி எடுத்து வருகிறது. தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைத்தால் தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்தை சமாளிக்க சரியாக இருப்பார் என்று எடப்பாடி கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தங்க தமிழ்ச்செல்வன் வருகையால் ஓபிஎஸ் தரப்புக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்ததாக சொல்கின்றனர். இதனால் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ் தரப்பு சில கண்டிஷன் போட்டுள்ளதாக சொல்கின்றனர். அதில் தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தனது கட்டுப்பாட்டில் கட்சி இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கூறுவதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தங்க தமிழ்செல்வனுக்கு மாநில அளவில் பதவி கொடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மாநில அளவில் பதவி கொடுப்பதால் அத கவனித்தால் போதும் என்றும் தேனி மாவட்ட அரசியலில் தலையிட வேண்டாம் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.