Skip to main content

ஒபிஎஸ் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு!

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

 

தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பிலும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சில கட்சிகளும் மற்றும் சுயேச்சைகளும் களத்தில் குதித்துள்ளனர்.

 

இந்தநிலையில் தான் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓ.பி.எஸ். தொகுதியான போடி தொகுதியும் அடக்கம். இந்த போடி தொகுதியில் இருந்து மூணாறு செல்லும் வழியில் தமிழக எல்லையாக ஸ்டாப் செலக்சன் இருக்கிறது. அதுவரை ஓபிஎஸ்ஸின் தொகுதி. இந்த டாப்ஸ்டேசனை ஒட்டியுள்ள முட்டம், புது சென்ட்ரல் ஸ்டேஷன் உள்பட சில மலை கிராமங்களுக்கு பல வருடங்களாகவே அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதியில் வாழக்கூடிய மலை கிராமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

Bodi


 

இதைப் பற்றி பலமுறை தொகுதி எம்எல்ஏவான ஓபிஎஸ்ஸிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் இதுவரை அவர்களுடைய  கோரிக்கைகளையும் குறைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. இதனால் மக்கள் அடிப்படை வசதிக்காக பெரிதும் போராடிவருகிறார்கள். இப்பகுதியில் இருக்கக்கூடிய கர்ப்பிணிப் பெண்களை கூட பிரசவத்திற்காக தோளி கட்டி தூக்கி வரக்கூடிய அவல நிலையில் தான் இருந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில்தான் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போஸ்டர்களை அடித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஓபிஎஸ்ஸின் தொகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் மலை கிராமங்கள் முழுவதும் அங்கங்கே ஒட்டியிருந்ததும் கூட அந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுப்பதாக ஓபிஎஸ் இதுவரை வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அதைக் கண்டு கொள்ளவும் இல்லை. இதனால் வரக்கூடிய பாராளுமன்றதேர்தலை புறக்கணிக்க தயாராகி வருகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்