Skip to main content

சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு... பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்த ஐகோர்ட்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

  mla

 

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

 

கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார். மகளைப் பார்ப்பதற்காக வந்த அந்தத் தொழிலாளி, ராஜ்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

பின்னர், மருத்துவமனையில் சென்று பார்த்தபோது சிறுமி சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் உயிரிழந்தது, பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், பன்னீர்செல்வம் மற்றும் ஜெய்சங்கர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

 

பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் இறந்து போனார்.

 

ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. ராஜ்குமாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஜெய்சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, இருவருக்கும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்  ராஜ்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்