சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருவல்லிக்கேணியில் புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முதல்வர் ஒரு செயலை செய்துள்ளார். முதல்வர் எழுந்து நின்று தீர்மானத்தை வாசிக்க ஆரம்பித்தார். ஆளுநர் அப்போது வெளியே சென்றார் என்பதைத்தானே நீங்கள் பார்த்தீர்கள்.
ஆளுநருக்கு முன்பே ரெண்டு பேர் கொண்ட பெரிய கும்பல் வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநருக்கு தமிழ் தெரியாது. ஆளுநரை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்கள் என சபையில் தெரிந்தவுடன் ரெண்டு பேரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி விட்டனர்.
அவர்கள் ஓடியதைப் பார்த்த ஆளுநர் அருகில் இருந்தவர்களை கூப்பிட்டு விசாரிக்க அவர் சொன்னார், உங்களை எதிர்த்து தான் தீர்மானம் கொண்டு வர உள்ளனர் என்று. அதன் பின்பே ஆளுநர் வெளியேறினார். எதிர்ப்பு தெரிவிக்க சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வருவது வழக்கம்தான். அதில் ஒரு காரணம் இருக்கும். மக்கள் பிரச்சனைக்கு கருப்பு சட்டை அணிந்து வருவது மரபு.
செய்தியாளர்கள் அவர்களிடம் ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்தீர்கள் என கேட்கின்றனர். ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் அருகருகே உட்கார வைத்துவிட்டனர் என்பதற்காக கருப்பு சட்டை அணிந்து வந்தார்களாம்” எனப் பேசினார்.