விருத்தாசலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
அப்போது அவர்,
சுயநலத்தோடு சிலர் வெளியே சென்றிருப்பதால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. உண்மையான தொண்டர்கள் கட்சியை வழிநடத்துவார்கள். ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் இன்றைக்கு அனைவரும் ஒன்றுதிரண்டு மேலும் சிறப்பாக கட்சியை வழிநடத்துவார்கள்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தோம். கட்சியை பதிவு செய்துவிட்டு தேர்தலில் நிற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. கட்சியை பதிவு செய்துவிட்டு, புதிய சின்னத்தில், நிலையான சின்னத்தில் போட்டியிடலாம் என்று முடிவு செய்தோம். ஆகையால் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
உடனே தேர்தலில் நிற்க பயம் என்று சொல்லுவார்கள். சொல்லுபவர்கள் சொல்லலாம். இந்த தேர்தலில் ஒரு சுயேட்சையாக ஒரு சின்னத்தில் நிற்போம். பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு வேறு சின்னத்தில் நிற்பதுபோல வரும். அதற்காகத்தான் கட்சியை பதிவு செய்து புதிய சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார்.