நேற்று மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியதாவது,

இடைத்தேர்தல் நடந்தால் அமமுகவுக்கு சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டடுள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவுதான் அமமுக. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அமமுக கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் எப்படி பதிவு செய்ய முடியும்? அப்படி பதிவு செய்தால் அதிமுகவை உரிமை கோருவதற்கான வாய்ப்பில்லாமல் போய்விடும், அதிமுகவை இழக்க நேரிடும் இதனால்தான் அமமுகவை இன்னும் பதிவு செய்யவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த கட்சிகளுடன் அமமுக கூட்டணி அமைக்க விரும்பவில்லை. மக்களும், தொண்டர்களும் எங்களுடன் இருக்கின்றனர். எங்களின் கூட்டணி கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 38 இடங்களிலும் அமமுக போட்டியிடும். அதிமுகவின் தற்போதைய அரசியல், வடிகட்டிய சந்தர்ப்பவாத அரசியல். ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளது, இதனால் ஜெயலலிதாவின் படத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது. அதிமுக கூட்டணி மானங்கெட்ட கூட்டணி. அதிமுக பொதுச்செயலாளர் போன்று மோடி செயல்படுகிறார், அவருக்கு கீழ்படிந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். செயல்படுகின்றனர். ஓ.பி.எஸ். விரைவில் பாஜவில் இணைந்து விடுவார்.