திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், திமுக 3 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் முஸ்லீம் லீக் கட்சியும் போட்டியிடுகின்றன.
திருப்பத்தூர் – நல்லதம்பி: – ஒன்றியச் செயலாளராக உள்ளவர், 2016ல் சீட் தரப்பட்டது. இவரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார். இரண்டாவது முறையாக மீண்டும் அவருக்கு சீட் தரப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை – தேவராஜ்: திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக உள்ளார். அமைச்சர் வீரமணி இரண்டு முறை வெற்றிபெற்ற ஜோலார்பேட்டை தொகுதியில் அவருக்குப் போட்டியாக நிறுத்தியுள்ளது திமுக.
ஆம்பூர் – வில்வநாதன். பேரணாம்பட்டு ஒன்றியச் செயலாளராக உள்ளவர், 2019ல் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏவானார். அதனால், இந்த தொகுதியில் மீண்டும் இவருக்கே சீட் வழங்கியுள்ளது தலைமை.
வாணியம்பாடி – முகமத் நயீம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக வாணியம்பாடி நகரைச் சேர்ந்த முகமத் நயீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.