Skip to main content

“எங்களைத் தான் அவர்கள் கட்சியாகவே கருதவில்லையே”- சீமான்

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

"They don't consider us as a party"- Seeman
கோப்பு படம்

 

திமுக நாம் தமிழர் கட்சியைக் கட்சியாகவே கருதவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

 

திமுகவின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பரிந்துரைக் கடிதத்தை  ஆளுநர் மாளிகை ஏற்றுக்கொண்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். 

 

இந்நிலையில், பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுகுறித்து பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு தருவார்கள் என்பது நாம் எதிர்பார்த்தது தான். சிறிது தினங்களில் துணை முதல்வர் ஆக்குவார்கள்.  அதனால் தம்பி உதயநிதிக்கு என் வாழ்த்துகள். 

 

அவர் பொறுப்பேற்கும் விழாவிற்கான அழைப்பு வந்ததா எனக் கேட்கின்றனர். எங்களைத்தான் அவர்கள் கட்சியாகவே கருதவில்லையே. அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிகளைத்தான் கட்சியாகக் கருதுகிறார்கள்” எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்