Skip to main content

''ஆளுநரின் உளறலுக்கு அளவே இல்லை...'' - வைகோ பேட்டி

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

 "There is no limit to the excitement of the governor..." - Vaiko interview


தமிழக ஆளுநரின் உளறலுக்கு அளவே இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

 

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''ஆளுநரைப் போன்ற ஒரு உளறல் பேர்வழியை  இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை. உளறிக் கொண்டே இருக்கிறார். சனாதன தர்மம்தான் இந்த நாட்டினுடைய இலக்கியம் என்கிறார். திருக்குறளை சொல்கிறார். அவர் முழுக்க முழுக்க ஒரு சனாதனவாதியாக மாறி, இந்துத்துவா பிரச்சாரகராக மாறிவிட்டார். ஒரு இந்துத்துவா பிரச்சாரகரைத்தான் ஆளுநராக இங்கே போட்டு வைத்திருக்கிறார்கள். அவருடைய உளறலுக்கு கணக்கே இல்லை'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்பு இப்படி ஒரு சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சிகளாக நீங்கள் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இது நிகழ்ந்திருந்தால் நிறைய பேசியிருப்பீர்கள் என்று சொல்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வைகோ, “உடனே கடமையைச் செய்து, 24 மணி நேரத்திற்குள்ளாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை அரசு எடுத்திருக்கின்றது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்