Published on 04/09/2019 | Edited on 04/09/2019
செப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்கிறார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.அதாவது தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
அந்த போட்டியில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்களை கூறிவருகின்றனர். இதனால் தமிழிசை இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும், தமிழக மக்களிடம் பாஜக கட்சியை பற்றி அதிகம் பேச வைத்தவர் தமிழிசை. தமிழகத்தில் பாஜக கட்சி மீது எதிர்ப்புகள் அதிகம் இருந்தாலும் தமிழிசையை அனைத்து கட்சி தலைவர்களும் சகோதிரியாக கருதி, ஆளுநர் பதவி அறிவிப்பு வந்தவுடன் கட்சி பாகுபாடின்றி வாழ்த்து தெரிவித்தனர். மக்களிடமும் பாஜகவின் அடுத்த தலைவர் பற்றி கேட்ட போது, அடுத்த தலைவராக வானதி சீனிவாசன் வரலாம் என்று கருத்து தெரிவித்தனர். அதே போல் தமிழிசை இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று அதிகப்படியான மக்கள் கருத்து தெரிவித்தனர்.