Published on 08/03/2021 | Edited on 08/03/2021

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் அக்கட்சியைச் சேர்ந்த முன்னணியினர் கடிதம் வழங்கியுள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஜக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கூட்டணியில் இருந்து விலகியது. இந்நிலையில் தற்போது திமுக கூட்டணிக்குத் தங்கள் கட்சியின் ஆதரவை அன்சாரி தெரிவித்துள்ளார். அவருடைய கட்சிக்கு திமுக தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால் அவர்கள் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.