தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 5.99 (5,98,69,758) கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 95 இலட்சத்து 94 ஆயிரத்து 923 பேரும், பெண்கள் 3 கோடியே 2 இலட்சத்து 69 ஆயிரத்து 045 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5,790 பேரும் உள்ளனர். வாக்காளர் சீட்டை வைத்து மட்டுமே ஓட்டு போடமுடியாது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையையும் காட்டவேண்டும்.
39 மக்களைவை தொகுதியில் மொத்தம் 845 வேட்பாளர்களும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் உள்ளனர். 1 இலட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும், 94 ஆயிரத்து 653 விவிபேட் இயந்திரங்கள் தயாராக உள்ளன என்றும், 127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், பெண்களுக்கென தனி வாக்குப்பதிவு மையம், ஒரு தொகுதிக்கு ஒன்று என ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்