தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் என்ற ஒளிவட்டத்திற்கு வந்திருக்கும் முருகன், அந்தப் பதவியில் கட்சியை எப்படி வழிநடத்துகிறார் என்று விசாரித்த போது, தமிழக பாஜக தலைவர் முருகனை தமிழக பாஜக சீனியர்கள் எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுக்கே இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதியை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் நோகடித்து ஓரம் கட்டினார்கள். எனினும், டெல்லியில் இருந்து வந்த தனக்கு விமான நிலையத்தில் தரப்பட்ட கோலாகலமான வரவேற்பில் முருகன் தரப்பு உற்சாகமாகவே இருக்கிறது.
>
அதேசமயம், காஞ்சி சங்கரமடத்துக்கு அவர் ஆசி வாங்கச் சென்ற போது, தனக்கு நிகராக அவரை நாற்காலியில் அமரவைத்துப் பேசுவதா? என்று கருதிய சங்கரமட பீடாதிபதியான விஜயேந்திரர், தன் அறையில் இருந்த தன் நாற்காலியையும் அப்புறப்படுத்தக் கூறிவிட்டு, தரையில் அமர்ந்துகொண்டு, முருகனை நிற்கவைத்து சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.