கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவரும் அ.தி.மு.க-வில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாகச் செயல்பட்டு வந்தனர். `அவர்கள் மூவரும் டி.டி.வி. தினகரனுடன் தொடர்பில் இருக்கின்றனர். அ.ம.மு.க நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் புகார் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
பிரபு எம்.எல்.ஏ
தகுதி நீக்கம் செய்ய உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி இந்த நோட்டீஸூக்கு எதிராக மூவரும் உச்ச நீதிமன்றத்ததை நாடினர். அவர்கள் மூவர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாக இருந்த அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம், கலைச்செல்வன் ஆகியோர் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து மீண்டும் தங்களைக் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
'ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் துளி கூட இல்லை!'- கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு!
இந்நிலையில் கள்ளக்குறிச்சி பிரபு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த கையோடு தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். சரியாக இதே நாளில் ஒருவருடத்துக்கு முன் ``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்!" இந்நிலையில் அ.தி.மு.க-வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டவரிடம் பேசினோம்.
பிரபு, உங்களுடைய இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?
ஆட்சி இருக்கும் வரையில் அதை மக்களுக்கானதாகப் பயன்படுத்த வேண்டும். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் தொகுதிப் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான். மற்றபடி இதில் வேற எந்த அரசியலும் இல்லை.
கள்ளகுறிச்சி தனி மாவட்டமாக அமைய வேண்டும் என்பது தான் உங்களது பிரதான கோரிக்கை. வேறு எதுவும் அ.தி.மு.க சார்பில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதா?
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
வாக்குறுதிகள் எதுவும் இல்லை. இன்னும் மீதியிருக்கும் இரண்டாண்டு காலம் தொகுதி பணிகளைச் செய்ய வேண்டும். அதேபோல, ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சி நிலைத்து நிற்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.
முதல்வர் உங்களிடம் என்ன கூறினார்?
கட்சியில் வழக்கம் போல் நல்ல படியாகச் செயல்படுங்கள். எதுவும் கோரிக்கை இருந்தால் கொண்டு வந்து கொடுங்கள். உடனே நிறைவேற்றித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
சி.வி.சண்முகம் முயற்சியால் தான் கட்சிக்குள் வருகிறீர்களா?
அப்படியில்லை. இது என் சொந்த விருப்பம்தான். தினகரன், சசிகலாவுடன் இனி எனக்கு எந்த உறவும் கிடையாது. அ.ம.மு.க தரப்பில் என்னை யாரும் தொடர்புகொண்டு பேசவில்லை. 2 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் பணியாற்றவே கட்சிக்குள் இணைந்துள்ளேன் என்றார்.