Published on 03/04/2019 | Edited on 03/04/2019
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், வேலூரில் தேர்தல் நடப்பதை நிறுத்த சதி நடப்பதாக தெரிவித்தார். திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் சோதனை நடத்தும்போது, அவர்கள் எதையும் கைப்பற்றவில்லை. இந்த சோதனை திமுகவை பழிவாங்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பெரியாரும், அண்ணாவும் சந்தித்துகொண்ட திருப்பூர், ஜி.எஸ்.டி. வரியால் வெறுப்பூர் ஆகிவிட்டது. தேர்தல் கமிஷனைக் கேட்கிறேன். நீங்கள் மோடிக்கு துணைபோய் கொண்டிருந்தால், பின்னால் நீங்கள் வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும். இது மிரட்டுவதற்காக சொல்லவில்லை, ஜனநாயகத்தின் அடிப்படையில் சொல்கிறேன்.